/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆய்வு
/
கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆய்வு
கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆய்வு
கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆய்வு
ADDED : மார் 13, 2024 07:03 AM

புதுச்சேரி புதுச்சேரி கடலோர காவல் படை மாவட்ட தலைமையகத்தில், கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி ஆய்வு செய்தார்.
இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல், கிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்ட, புதுச்சேரியில் உள்ள கடலோர காவல் படை மாவட்ட தலைமையகத்தை, கடந்த இரு தினங்களாக பார்வையிட்டார்.
மேலும், புதுச்சேரி அலுவலக செயல்பாடு, அதன் தயார் நிலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை ஆய்வு செய்தார். அவரிடம், புதுச்சேரியில் அமைய உள்ள கடலோர காவல் படையின் விமானப் பிரிவு தளம் மற்றும் கடலோர கண்காணிப்பு மையம் உள்ளிட்டவற்றின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து, மாவட்ட கடலோர காவல் படை கமாண்டர் டஸிலா, விளக்கமாக கூறினார்.
இந்திய கடலோர காவல் படையில் விமானப் பிரிவு மேம்பாடு என்பது, புதுச்சேரி மற்றும் மத்திய தமிழக கடலோர மீனவர்களின் பாதுகாப்பிற்காக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்த ஊக்கமளிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் பாராட்டப்பட்டனர்.

