ADDED : அக் 15, 2025 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார் பகுதியில் உள்ள பட்டாசு தயாரிப்பு கூடங்களில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
எஸ்.பி., சுப்ரமணியன் உத்தரவின் பேரில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் கே.ஆர். பாளையம், கூனிச்சம்பட்டு மற்றும் செட்டிப்பட்டு பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு தயாரிப்பு கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், வெடிமருந்து குடோன் மற்றும் தொழிலாளர்ளுக்கு செய்துள்ள பாதுகாப்பு நடவடிக் கைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், பட்டாசுகளை மொத்தமாக வாங்குபவர்களின் அடையாள அட்டை நகலை பெற்றுக் கொண்டு வழங்க அறிவுறுத்தினர்.