/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் போர்வெல் இயக்கி வைப்பு
/
குடிநீர் போர்வெல் இயக்கி வைப்பு
ADDED : ஆக 21, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் குடிநீர் போர் வெல்லை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை தொகுதி, சாந்தி நகர் அருகில் பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு சார்பில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.பணிகள் முடிவடைந்து குடிநீர் போர் வெல் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., போர்வெல்லை இயக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த போர்வெல் குடிநீர் மூலம், சாந்தி நகர், நெசவாளர் நகர், லாஸ்பேட்டை, ஆனந்தா நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் பயனடைவர்.