/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்.இ.டி., மின் விளக்குகள் துவக்கி வைப்பு
/
எல்.இ.டி., மின் விளக்குகள் துவக்கி வைப்பு
ADDED : மார் 04, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் என்.ஏ.பி., நகர், லலிதா, புருேஷாத்தம்மன் கார்டன் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தெரு மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழந்து காணப்பட்டது.
இதனால் அப்பகுதிகளில் தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ..விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து மின்துறை சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிதாக எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.இதன் துவக்க நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவலு கலந்து கொண்டு எல்.இ.டி. தெரு மின்விளக்குளை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், இளநிலைப் பொறியாளர் அன்பழகன் மற்றும் மின்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

