/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
/
ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 16, 2025 03:37 AM
புதுச்சேரி: தபால் ஊழியர்கள் மூலம் டிஜிட்டல் முறையில் வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கமால் பாஷா செய்திக்குறிப்பு:
மத்திய அரசு அலுவலங் களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
இதில், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், தபால் ஊழியர்கள் மூலம், டிஜிட்டல் முறையில் வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய் வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
சேவை கட்டணமாக 70 ரூபாய் செலுத்த வேண்டும். தபால் ஊழியர்கள் ஓய்வூதியதாரரின் வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க உதவி செய்வார்கள்.
மேலும், தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அனைத்து அஞ்சலங்களை அணுகலாம். 9952053573 எண்ணில் புதுச்சேரி கிளை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

