மின் கட்டண நிலுவையை செலுத்தி துண்டிப்பை தவிர்க்க அறிவுறுத்தல்
மின் கட்டண நிலுவையை செலுத்தி துண்டிப்பை தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : செப் 04, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு மின்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மின்துறை கிராமம் தெற்கு கோட்டம் பகுதி செயற்பொறியாளர் உமேஷ் சந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி கிராமம் (தெற்கு) கோட்டம் அலுவலகத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், கரையாம்புத்துார் ஆகிய பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண நிலுவை தொகை மற்றும் மாதந்திர மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்த்து கொள்ளவும்.
மின் இணைப்பை துண்டித்த பிறகு நிலுவை தொகையை முழுவதுமாகவும் அல்லது தவணை முறையில் செலுத்திய பிறகு மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
