/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்
/
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2025 04:46 AM
பாகூர்: வணிக வளாகங்களை மறு மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு, உரிமையாளர்கள், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து ஆணையர் சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களை மறு மதிப்பீடு செய்யும் வகையில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் தற்போது மறு அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு,வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்து உதவுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
மேலும், சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணத்தை, பொதுமக்கள் சிரமமின்றி செலுத்தும் வகையில், நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை நேரடியாகவோ அல்லது lgrams.py.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரிகளை செலுத்தலாம். மேலும், அனைத்து கிராம பகுதிகளில் உள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகள் உடனே முறைப்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.