/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெனரேட்டர்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தல்
/
ஜெனரேட்டர்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தல்
ADDED : டிச 01, 2024 05:38 AM

திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு கொம்யூன் கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
புயல் காரணமாக புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், காட்டேரிக்குப்பம் - சுத்துக்கேணி சாலையில் விழுந்த மரம், மணலிப்பட்டில் சாலையில் முறிந்து விழுந்த மரத்தின் கிளைகளை பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமங்களில் மழை பாதிப்புகள் குறித்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புயலின் போது மின்தடையால், குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால், அதனை உடனே வெளியேற்றுவதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். மழை நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை கண்காணிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, புயல் எதிரொலியாக திருக்கனுார் மற்றும் திருபுவனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எஸ்.பி., வம்சித ரெட்டி பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார், கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.