ADDED : அக் 30, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டம், 70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டில்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி சட்டசபை அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட்ஸ், சுகாதாரத் துறை இயக்குநர் (பொறுப்பு) செவ்வேள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

