ADDED : செப் 10, 2026 07:22 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் பாக்கமுடையன்பேட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடபட்டு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையொட்டி, தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில் தட்டாஞ்சாவடி தொகுதி பாக்கமுடையன்பேட், ஏர்போர்ட் சாலை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர், போலீசாருடன் இணைந்து நேற்று பைக் மற்றும் கார்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வரபடுகிறதா என தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகளுடன் வந்த கார்களை தடுத்து நிறுத்தி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
