/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்ன வாய்க்காலை மேம்படுத்தும் பணி தீவிரம்! அலங்கார விளக்குகளால் ஜொலிக்க போகிறது
/
சின்ன வாய்க்காலை மேம்படுத்தும் பணி தீவிரம்! அலங்கார விளக்குகளால் ஜொலிக்க போகிறது
சின்ன வாய்க்காலை மேம்படுத்தும் பணி தீவிரம்! அலங்கார விளக்குகளால் ஜொலிக்க போகிறது
சின்ன வாய்க்காலை மேம்படுத்தும் பணி தீவிரம்! அலங்கார விளக்குகளால் ஜொலிக்க போகிறது
ADDED : மார் 02, 2024 06:20 AM

புதுச்சேரி : சின்ன வாய்க்காலை முன் மாதிரி வாய்க்காலாக மேம்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
...புதுச்சேரி நகர பகுதியில், பெரிய வாய்க்கால் -சின்ன வாய்க்கால் ஆகியவை பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உள்ளன.
இதில் அண்ணாசாலை முதல் செஞ்சி சாலை வரை 800 மீட்டர் நீளமுள்ள சின்ன வாய்க்காலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணியை பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டம் துவக்கியுள்ளது.
இப்பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரூ.3.81 கோடியில் இருபுறமும் கரை மேம்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் சின்ன வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை வீசாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.
சிறுபாலங்கள்
சின்ன வாய்க்காலில் நான்கு சிறு பாலங்கள் குறுக்கிடுக்கின்றன. இந்த சிறிய பாலங்கள் ரூ.2.45 கோடியில் பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட உள்ளது.
இதற்காக ராட்சத பிரிகாஸ்ட் கல்வெர்ட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, இரவு பகலாக பணிகள் நடந்து வருகின்றது.
தொட்டி
சின்ன வாய்க்காலில் மழைக்காலத்தில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.இருப்பினும் செஞ்சி சாலை அருகே பெரிய வாய்க்காலுடன் சங்கமிக்கும் இடத்தில் வெள்ளம் வடிவது சிக்கலாகவே இருந்து வருகின்றது.இந்த இடத்தில் மழைக்காலங்களில் தண்ணீரை மோட்டர் பம்ப் கொண்டு விரைவாக இறைத்து வெளியேற்ற தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.எனவே மழைக்காலத்தில் சின்ன வாய்க்காலில் வந்து சேரும் வெள்ளம் விரைவாகவே வடிந்து விடும்.
ஜொலிக்கும்
பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட அதிகாரிகள் கூறும்போது,வாய்க்காலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சின்ன வாய்க்கால் முன் மாதிரி திட்டமாக துவக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்க்காலில் வீடுகளின் கழிவு நீர் செல்லாமல் மழை நீர் மட்டும் செல்லும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இதற்கான சின்ன வாய்க்காலில் இரண்டுபுறமும் குப்பைகள் வீசி எறியாத வகையில் இரும்பு தடுப்புகள் உயரமாக அமைத்துள்ளோம்.இதன் மூலம் துர்நாற்றம் வீசுவது முற்றிலும் தடுக்கப்பட்டு, சின்ன வாய்க்கால் புது பொலிவு பெரும்.
அடுத்து இரவில் ஜொலிக்கும் அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் 800 மீட்டர் நீளமுள்ள சின்ன வாய்க்கால் வாக்கிங் செல்லும் ட்ராக்காக மாற்றப்பட உள்ளது.
இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சிக்கான சிறந்த இடமாகவும் திகழும். மே மாதத்திற்குள் முழு அளவில் சின்ன வாய்க்கால் ரெடியாகி விடும் என்றனர்.

