ADDED : ஏப் 09, 2026 05:21 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு மது கடத்தலை தடுக்க புதுச்சேரி கலால் துறை கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, மது கடத்தலை தடுப்பதற்காக தட்டாஞ்சாவடியில் உள்ள கலால் துறை அலுவலகத்தில் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி எல்லைப் பகுதியில் 19 செக் போஸ்ட்கள் கண்காணிப்பு கேமராக்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரியில் உள்ள 443 மதுபான பார்கள், 83 சாராயக்கடைகள், 27 மதுபான குடோன்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி மதுபா னங்கள் விற்பனை மற்றும் நடவடிக்கை குறித்து, கண்ட்ரோல் ரூமில் இருந்து கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையில், தாசில்தார் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட ஊழியர்கள் கண்காணிக்கப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக தேர்தல் முடியும் வரை கண்காணிப்பு பணிகள் தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
