/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி
/
கல்லுாரிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி
ADDED : அக் 27, 2024 04:00 AM
புதுச்சேரி, : புதுச்சேரி சமுதாயக் கல்லுாரியின் உடற்கல்வி மற்றும் யோகா துறையின் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான தேக்வாண்டோ போட்டி லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
போட்டியை, துணை இயக்குனர் வைத்தியநாதன், சமுதாயக் கல்லுாரி முதல்வர் லலிதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டியில் 20க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.
ஆண்கள் பிரிவில் ஓவரால் கோப்பையை சமுதாய கல்லுாரி அணியும், பெண்கள் பிரிவில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அணியும் பெற்றனர்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் தென்னவன், அலுவலர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி துறையின் உதவி பேராசிரியர் ஜெகதீஸ்வரி செய்திருந்தார்.