/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி
/
கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி
ADDED : டிச 04, 2025 05:13 AM

புதுச்சேரி: கல்லுாரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் புதுச்சேரி பல்கலை அணி முதலிடம் பிடித்தது.
புதுச்சேரி பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான ஆண்கள் பிரிவு வாலிபால் போட்டி, முள்ளோடையில் உள்ள பி.எஸ்.வி., கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன. அதில், புதுச்சேரி பல்கலைக்கழ சமுதாய கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.பெண்களுக்கான போட்டி புதுச்சேரி பல்கலையில் நடந்தது.
அதில், 14 அணிகள் பங்கேற்றன. அதில், புதுச்சேரி பல்கலை அணி முதலிடத்தையும், சமுதாய கல்லுாரி 2ம் இடத்தை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சமுதாய கல்லுாரி முதல்வர் லலிதா பரிசுகள் வழங்கினார்.

