/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் விவசாயிகள் சங்கம் கருத்து
/
இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் விவசாயிகள் சங்கம் கருத்து
இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் விவசாயிகள் சங்கம் கருத்து
இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் விவசாயிகள் சங்கம் கருத்து
ADDED : பிப் 03, 2024 12:13 AM
புதுச்சேரி, - இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என, புதுச்சேரி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்க தலைவர் கீதநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான உரமானியம் அதிகரிக்கப்படும், பொட்டாஷ், டி.ஏ.பி., போன்ற உரங்களுக்கு விலை குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே அளித்துள்ளது.
100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தவில்லை. சம்பளம் 600 ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கவில்லை. சமூகக் கட்டமைப்பும், கிராமப்புற வளர்ச்சி, விவசாய முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. ஒட்டுமொத்தமாக கிராமப்புற மக்களுக்கும், விவசாய வளர்ச்சிக்குமான பட்ஜெட் இல்லை. எனவே இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

