/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
/
புதுச்சேரி சட்டசபையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
ADDED : பிப் 13, 2024 05:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
என்.ஆர் காங்., - பா.ஜ., கூட்டணி அரசில், கடந்தாண்டு 15வது சட்டசபை 4வது கூட்டத்தொடரின் போது 2023--24 நிதியாண் டிற்கான 11,600 கோடிக்கு முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டினை முழுமையாகத் தாக்கல் செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாகப் பணியாற்றிய நிதித்துறை அதிகாரிகள், நிதித்துறை ஊழியர்கள் அனைவருக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழ் நிலையில் பல மாநிலங்களில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அண்டை மாநிலமான தமிழகத்தில் வரும் 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆனால் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான எந்த பூர்வாங்க பணிகளும் நடைபெறவில்லை.இதனால் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை புதுச்சேரி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதி தேவை.
புதுச்சேரி அரசின் பட்ஜெட் மத்திய உள்துறைக்கு பின்,மத்திய நிதி துறைக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்ய முடியும்.ஆனால் குறுகிய காலமே உள்ளதால் முழு பட்ஜெட் தாக்கல் வாய்ப்பில்லை.எனவே இடைக்கால பட்ஜெட்டிற்கு புதுச்சேரி அரசு ரெடியாகிறது.
எவ்வளவு ஒதுக்கீடு
2023--24-ஆம் ஆண்டிற்கு புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு 3117 கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்தது.
தற்போது 2024-25-ம் ஆண்டிற்கு மத்திய நிதியுதவியாக சில நாட்களுக்கு முன்பு சமர்ப்பித்த மத்திய பட்ஜெட்டில் 3,269 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது