/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச சிலம்பம் போட்டி 28ல் புதுச்சேரியில் துவக்கம்
/
சர்வதேச சிலம்பம் போட்டி 28ல் புதுச்சேரியில் துவக்கம்
சர்வதேச சிலம்பம் போட்டி 28ல் புதுச்சேரியில் துவக்கம்
சர்வதேச சிலம்பம் போட்டி 28ல் புதுச்சேரியில் துவக்கம்
ADDED : செப் 26, 2024 03:05 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் வரும் 28ம் தேதி சர்வதேச பாரம்பரிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் வரும் 28, 29ம் தேதிகளில், சர்வதேச பாரம்பரிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது.
இதில் இந்தியா, நேபாளம், பூட்டான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 6 முதல் 21 வயதிற்கு உட்பட்ட 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு நான்கு பிரிவுகளில், எடை அடிப்படையில் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டியை, வரும் 28ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.
வி.ஜி.பி., குரூப் சேர்மன் சந்தோஷம், தென்காசி டிரஸ்ட் சிலம்ப டிப்ளமா கல்லுாரி இயக்குனர் திருமாறன், திமோர் அமைதி பல்கலைக்கழக ஆலோசகர் இசாக் பாஸ்கரன், தொழிலதிபர் முகமது இட்ரீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரன், செயலர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை, இந்திய இளைஞர் பாரம்பரிய சிலம்பம் அசோசியேஷன் தலைவர் தர்மசாஸ்தா, பொதுச்செயலர் வேல்முருகன், ஒருங்கிணைப்பு செயலர் சுந்தரவடிவேலன் செய்துள்ளனர்.