தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேம்பட்ட விபத்து சிகிச்சை குறித்து ஜிப்மரில் சர்வதேச மாநாடு

 மேம்பட்ட விபத்து சிகிச்சை குறித்து ஜிப்மரில் சர்வதேச மாநாடு

 மேம்பட்ட விபத்து சிகிச்சை குறித்து ஜிப்மரில் சர்வதேச மாநாடு


ADDED : பிப் 08, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் மேம்பட்ட விபத்து சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு நடந்தது.

ஜிப்மரில் அப்துல் கலாம் கலையரங்கில் நடந்த மாநாட்டை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். இயக்குனர் வீர் சிங் நேகி, எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் மிஷ்ரா, அமெரிக்க அறுவைச் சிகிச்சை கல்லுாரி கல்வி திட்டத் தலைவர் மயூர் நாராயண் மற்றும் அதிகாரிகள், பேராசிரியர்கள், தேசிய மற்றும் சர்வதேச தேச நிபுணர்கள், விபத்து சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், அவசர சேவைப் பணியாளர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில் 'விபத்து சிகிச்சை என்பது ஒரு முக்கியமான பொதுச் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக சவாலாக உள்ளது. இளம் வயது மக்களையே விபத்துகள் அதிகமாக பாதிக்கிறது. உலகளவில் சாலை விபத்து மரணங்களில் இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது. உயிர்களை காப்பாற்ற முறையான விபத்து மேலாண்மை அமைப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.

ஜிப்மருக்கு நவீன வசதிகளுடன் கூடிய விபத்து சிகிச்சை மையம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மையம் அமைக்க 50 ஏக்கர் நிலம் வழங்க புதுச்சேரி அரசு உறுதியளித்துள்ளது' என்றார்.

பேராசிரியர் மிஷ்ரா, பேசுகையில், 'விபத்து இழப்புகள், புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் இழப்பைவிட அதிகம். விபத்துகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவை.

தேசிய அளவில் திறன் மேம்பாட்டில் ஜிப்மர் முக்கிய பங்கு வகிக்கிறது. புதுச்சேரியில் விபத்து சிகிச்சை மையம் அமைப்பது தேசிய அளவில் முக்கிய முன்னேற்றமாக இருக்கும்' என்றார்.

மேம்பட்ட விபத்து கல்வி மற்றும் தொழில்முறை திறன் வளர்ச்சி, சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு, முன் -மருத்துவ விபத்து பதிலளிப்பை வலுப்படுத்துதல் என்பதை வலியுறுத்தி, போலீஸ், தீயணைப்பு பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் முதற்கட்ட உதவியாளர்களாக இருப்பதை கருத்தில் கொண்டு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.

இதில், அடிப்படை உயி ர்காக்கும் சிகிச்சை, ரத்தப்போக்கு கட்டுப்பாடு, எலும்பு நிலை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us