தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச திரைப்பட விழா நாளையுடன் நிறைவு

 சர்வதேச திரைப்பட விழா நாளையுடன் நிறைவு

 சர்வதேச திரைப்பட விழா நாளையுடன் நிறைவு


ADDED : பிப் 14, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் துவங்கியது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் முகமது ஹசன் அபித் வரவேற்றார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகைகள் ரேவதி, சுனைனா பங்கேற்றனர். 2024ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸல்' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 2025ம் ஆண்டிற்கான விருதை கடல் கன்னி படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் பெற்றனர்.

இருவருக்கும் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச திரைப்பட விழாவுக்கான 'லோகோ' உருவாக்கும் போட்டியில் வென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணனுக்கு ரூ.50 ஆயிரம் காசோலையும், பி.எப்.எப். (புதுச்சேரி திரைப்பட விழா) வடிவமைத்த புதுச்சேரியை சேர்ந்த சக்திவேலுக்கு ஜூரி விருதும் வழங்கப்பட்டன.

புதுச்சேரி தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டாளர் பங்கஜ்குமார் ஜா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார், கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து குரங்கு பெடல் திரைப்படம் திரையிடப்பட்டது.

நாளை 15ம் தேதி வரை திரைப்பட விழாவில், காந்தி திடல், கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம், அலையன்ஸ் பிரான்சிஸ், லாஸ்பேட்டை அப்துல்கலாம் கோளரங்கம் ஆகிய இடங்களில் 35 பிராந்திய மொழி படங்கள் திரையிடப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us