ADDED : பிப் 16, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், நடந்த சர்வதேச திரைப்பட நிறைவு விழா நேற்று நடந்தது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், கடந்த 12ம் தேதி சர்வதேச திரைப்பட விழா காந்தி திடலில் துவங்கியது. தொடக்க விழாவில் 2024-25ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜிக்கு வழங்கப்பட்டன.
கருவடிக்குப்பம் காமராஜ் மணிமண்டபம், அலையன்ஸ் பிரான்சிஸ், லாஸ்பேட்டை டாக்டர் அப்துல்கலாம் கோளரங்கம் மற்றும் கடற்கரை சாலை காந்தி திடலில் 8 மொழிகளில் உருவான 35 படங்கள் திரையிடப்பட்டன.
இதனை குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்த னர்.

