ADDED : ஆக 21, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உடுமலைப்பேட்டையில் நடந்த 5வது சர்வதேச கராத்தே போட்டியில், புதுச்சேரி செய்கோ காய் கராத்தே அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
உடுமலைப்பேட்டையில் கடந்த 16ம் தேதி, 5வது சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய, புதுச்சேரி செய்கோ காய் கராத்தே அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
பரிசு வென்ற வீரர்களை, புதுச்சேரி செய்கோ காய் கராத்தே சங்க தலைவர் கிறிஸ்டிராஜ், பிரசிடென்சி பள்ளி (எலைட்) துணை முதல்வர் ஆரோக்கியதாஸ், செயலாளர் கவுதம், துணைத் தலைவர் கியோஷி ஞானசேகரன், பொதுச் செயலாளர் விஸ்வசுந்தரம், பிரசிடென்சி குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி, அம்ரிதா, ஞானாசவுந்தரி ஆகியோர் பாராட்டினர்.
பயிற்சியாளர்கள் ஏகாம்பரம், அருள்ராஜ், பாரத், திரிஷாந்த் சந்திரபூஷன் ஆகியோர் உடனிருந்தனர்.
