/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பன்முகப் பார்வையில் பாரதியார் படைப்புகள் பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம்
/
பன்முகப் பார்வையில் பாரதியார் படைப்புகள் பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம்
பன்முகப் பார்வையில் பாரதியார் படைப்புகள் பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம்
பன்முகப் பார்வையில் பாரதியார் படைப்புகள் பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம்
ADDED : டிச 17, 2025 05:34 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 'பன்முகப் பார்வையில் மகாகவி பாரதியார் படைப்புகள்' என்ற தலைப்பில் பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் நடந்தது.
மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம், பிரான்சு கம்பன் கழகம், மயிலி பன்னாட்டு தமிழ் ஆய்வு மின்னிதழ் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, பேராசிரியர் வேல் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
சபாநாயகர் செல்வம்,'பன்முக பார்வையில் பாரதியார் படைப்புகள்' என்ற ஆய்வு நுாலையும், மோதிலால் நேரு எழுதிய 'பத்துப்பாட்டு தொன்மையும் இலக்கிய வளமும்' என்ற நுாலையும் வெளியிட்டார்.
மயிலி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு மின்னிதழை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வெளியிட்டார்.
புதுவை தமிழ்ச் சங்க செயலர் சீனு மோகன்தாஸ், பொருளாளர் அருள் செல்வம் ஆகியோர் பராதி படக்காட்சியை திறந்து வைத்தனர். பேராசிரியர்கள்நீலமேகம், ரத்தின வெங்கடேசன், ராமலிங்கம், சித்ரா, ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர்கள் பரிமளா முருகானந்தம், சித்ரா, செந்தமிழ்ச்செம்மல், சீனு வேணுகோபால், ரவிக்குமார், மருத்துவர் ஜீவரேகா, செங்கமலத்தாயார், கனகராசு இளங்கோ, சிவபெருமான், வேல்முருகன், வெங்கடேசன், பழனியப்பன்,விஜயகுமார், கோதண்டபாணி, செந்தமிழ், பெரியசாமி ஆகியோருக்கு மகாகவி விருதும், 72 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

