sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணக்குள விநாயகர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

/

மணக்குள விநாயகர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்


ADDED : ஜூன் 07, 2025 02:50 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, மெட்ராஸ் ஐ.இ.இ.இ., அமைப்பு சார்பில் பொறியியல் பயன்பாடுகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த முதல் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

துவக்க நிகழ்ச்சியில் தாய்லாந்து பாங்காய் கிங் மோங்க்குட்டின் தொழில்நுட்ப பல்கலைக் கழக இணை பேராசிரியர் வித்தவத் சித்தாகுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணுவியல் துறை பேராசிரியர் நாகராஜன் நோக்கவுரையாற்றினார். மணக்குள விநாயகர் கல்வி குழு தலைவர் தனசேகரன் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து புதுமையான யோசனைகளை முன் வைக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

பொருளாளர் ராஜராஜன் ஏ.ஐ., தொழில்நுட்பம், ஸ்மார்ட் தீர்வுகள் குறித்து பேசினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், இணை செயலாளர் வேலாயுதம் வாழ்த்தி பேசினர்.

இந்த கருத்தரங்கில் 182 தேசிய மற்றும் 7 சர்வதேச கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1554 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் 203 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் சிறப்பு அமர்வுகளில் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்து கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு டீன் கைலாசமே, கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை தலைவர் ராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us