ADDED : மார் 12, 2024 06:28 AM

புதுச்சேரி, : திண்டிவனம், ஓங்கூர் தட்சசீலா பல்கலையில் உலக மகளிர் தின விழாநடந்தது.
விழாவில், திண்டிவனம் சாணக்கியா பள்ளி முதல்வர் அருள்மொழி பேசுகையில், மாணவர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக பெண்கள் படிக்கும் காலத்தில் திறமையுடன் செயல்பட்டால் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்றார்.
விழாவில், பல்கலை வேந்தர் தனசேகரன், இணை வேந்தர்கள் ராஜராஜன், மருத்துவர் நிலா பிரியதர்ஷினி, துணைவேந்தர்விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர்செந்தில், இணை பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன்சுப்பிரமணியன், கலை அறிவியல் துறை டீன் தீபா, பொறியியல் துறை டீன்சுபலட்சுமி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.
விழாவையொட்டி, நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர்கள் நிர்வாகவியல் துறை சசி, ஆங்கிலத்துறை கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
