ADDED : மார் 10, 2026 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இன்னர் வீல் கிளப் ஆப் பாண்டிச்சேரி காசுமஸ் சார்பில் உலக மகளிர் தின விழா ஹோட்டல் செண்பகாவில் நடந்தது.
சங்கத்தின் தலைவி கோகிலா மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட தலைவர் பத்மினி கபாலி மூர்த்தி கலந்து கொண்டு கல்வி, மருத்துவம், இலக்கியம், கலை, விளையாட்டு மற்றும் சமூக சேவையில் பணியாற்றி வரும் 11 மகளிர்களுக்கு விருது வழங்கினார்.
கல்வித் துறையின் சமகர சிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, போலீஸ் எஸ்.பி., சுருதி பங்கேற்று வாழ்த்தி பேசினார். சங்கத்தின் செயலாளர் தமிழரசி பழனியப்பன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மாணிக்கம் ஹரிஷ், ராஜன் மற்றும் பழனியப்பன் செய்திருந்தனர்.

