/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோள தட்டையால் உருவாக்கப்பட்ட கவர் அறிமுகம் பிளாஸ்டிக் மாற்றாக அரசு நடவடிக்கை
/
சோள தட்டையால் உருவாக்கப்பட்ட கவர் அறிமுகம் பிளாஸ்டிக் மாற்றாக அரசு நடவடிக்கை
சோள தட்டையால் உருவாக்கப்பட்ட கவர் அறிமுகம் பிளாஸ்டிக் மாற்றாக அரசு நடவடிக்கை
சோள தட்டையால் உருவாக்கப்பட்ட கவர் அறிமுகம் பிளாஸ்டிக் மாற்றாக அரசு நடவடிக்கை
ADDED : பிப் 08, 2025 06:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், பிளாஸ்டிக் சாராய பாக்கெட்டிற்கு மாற்றாக, எளிதில் மட்கக்கூடிய சோள தட்டையால் உருவாக்கப்பட்ட கவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடைகள், 230 பார்கள் உள்ளன. இங்கு 180 மி.லி., பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பாக்கெட் சாராயம் விற்கப்படுகின்றது.
இந்த பிளாஸ்டிக் பாக்கெட் சாராயத்தை வாங்கி செல்லும் குடிமகன்கள் பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.
இவைகள் வாய்க்கால், ஆறுகள் மூலம் கடலில் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கிறது. கால்நடைகளும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை சாப்பிட்டு பாதிக்கப்படுகின்றன.
இதனால், புதுச்சேரி சாராயக்கடைகளில் பிளாஸ்டிக் பாக்கெட்டிற்கு மாற்றாக சோள தட்டை மூலம் தயாரித்த எளிதில் மட்கக்கூடிய பயோ டி கிரைடபிள் கவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை அறிவியல் கோளரங்கில் நேற்று நடந்த விழாவில் கலால் துறை, மதுக்கடை உரிமையாளர்கள் முன்னிலையில் இயற்கையில் மட்கக்கூடிய கவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறும்போது, புதுச்சேரியில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள 15 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் மட்காத பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்ட பாக்கெட் சாராய கவரும் உள்ளடக்கம்.
அதன் காரணமாகவே மாற்று ஏற்பாடாக மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மட்கக் கூடிய பயோ டி கிரைடபிள் பிளாஸ்டிக் கவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உருதியான இந்த கவர், சுற்றுச்சூழலை பாதிக்காது. எளிதில் மட்கிவிடும். இத்துடன், இயற்கையில் மட்கக் கூடிய 3 கிலோ பொருட்களை தாங்கும் 'பை', பிளாஸ்டி கப்பிற்கு மாற்றாக 'கப்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி மதுக்கடைக்களில் முற்றிலுமாக பிளாஸ்டிக் தவிர்க்கப்படும் என்றார்.