/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு பாதிப்பு தகவல் கசிய விட்டது யார் சுகாதாரத்துறையில் விசாரணை
/
டெங்கு பாதிப்பு தகவல் கசிய விட்டது யார் சுகாதாரத்துறையில் விசாரணை
டெங்கு பாதிப்பு தகவல் கசிய விட்டது யார் சுகாதாரத்துறையில் விசாரணை
டெங்கு பாதிப்பு தகவல் கசிய விட்டது யார் சுகாதாரத்துறையில் விசாரணை
ADDED : செப் 25, 2024 04:20 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பை தடுப்பதற்கு பதில், டெங்கு பாதிப்பு தகவல்களை கசிய விட்டது யார் என சுகாதாரத்துறையில் விசாரணை நடந்து வருகிறது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான மக்கள் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். டெங்கு, சிக்குன்குனியா, டைபாய்டு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
பருவ மழை துவங்கும் முன்பும், முடியும் காலத்திலும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். இது தெரிந்தும், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காததால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 23 நாட்களில் புதுச்சேரியில் 178 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஆனால், கடந்த 7 நாட்களில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள பட்டியல் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலும், சமூக வலைத்தளத்தில் சுகாதார ஊழியர்கள் மூலம் வெளியான தகவல்களும் முரண்பாடாக உள்ளது. இதனால் புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெங்கு பாதிப்புகளை வெளியில் கசிய விட்ட ஊழியர் குறித்து சுகாதாரத்துறையில் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதில், தகவல் கசிய விட்ட ஊழியர்களை தேடுவது வியப்பாக உள்ளது.