/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னணி நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு
/
முன்னணி நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு
ADDED : மார் 27, 2025 04:00 AM
சட்டசபையில் நேற்று தொழில் வணிகத் துறை, மின் துறையின் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்.
சேதராபட்டு, கரசூரில் கையகப்படுத்தப்பட்ட 750 ஏக்கர் நிலம் தற்போது பிப்டிக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் தொழில் துவங்க நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏ.எப்.டி., சுதேசி மில்லில், ஐ.டி., பார்க் கொண்டு வரப்படும். மேலும், ஏ.எப்.டி,யில் 5 ஏக்கர் பரப்பில் ரூ.124 கோடி செலவில் ஏக்தா மால் கட்டப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ. 104 கோடி வழங்குகிறது. நடப்பாண்டில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முன்னணி நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
மின் துறை
லாஸ்பேட்டை, தவளக்குப்பத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். தற்போதுள்ள மின் கட்டமைப்பு திறனை அதிகரிக்க ரூ.472 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை 60 சதவீதம் மத்திய அரசு வழங்கும்.
அரசு பல்வேறு புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி நிலையங்களில் இருந்து 390.64 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.