/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் இலக்கண போட்டி தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு
/
தமிழ் இலக்கண போட்டி தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 17, 2025 11:26 PM
புதுச்சேரி: அரசு கலை, பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் இலக்கணப் போட்டி தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறை தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்பு பணி அதிகாரி வாசுகிராஜாராம் செய்திக்குறிப்பு;
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ் இலக்கண ஆர்வத்தை மேம் படுத்தும் நோக்கில், புதுச் சேரி தமிழ் வளர்ச்சி சிறகம், தமிழ் இலக்கணப் போட்டி தேர்வை நடத்துகிறது.
தேர்வு விதிமுறைகள் புதுச்சேரி மாநிலத்தில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இத்தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தமிழ் இலக்கண பாடத் திட்டத்தையொட்டி தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ் இலக்கணப் பகுதியில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும்.
போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பு, போட்டித் தேர்வு நடத்தப்படும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளியின் வழியாக வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் 9360962442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரினை பதிவு செய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.