/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் பதவிக்கான போட்டி தேர்வில் முறைகேடு: அமைச்சக ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
/
உதவியாளர் பதவிக்கான போட்டி தேர்வில் முறைகேடு: அமைச்சக ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
உதவியாளர் பதவிக்கான போட்டி தேர்வில் முறைகேடு: அமைச்சக ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
உதவியாளர் பதவிக்கான போட்டி தேர்வில் முறைகேடு: அமைச்சக ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மார் 01, 2024 02:53 AM

புதுச்சேரி: உதவியாளர் பதவிக்கான போட்டி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசில் அமைச்சக ஊழியர்களாக பதவிகளான எல்.டி.சி., யூ.டி.சி., உதவியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்கள் உள்ளன. எட்டு ஆண்டுகள் பணி புரிந்த எல்.டி.சிகள், யூ.டி.சிகளாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
இதேபோல் பத்தாண்டு கள் பணி புரிந்த யூ.டி.சி.,களுக்கு உதவியாளர்களாகவும்,ஐந்தாண்டுகள் பணிபுரிந்த உதவியாளர்கள் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
அதன்படி யூ.டி.சி.,க்களுக்கு உதவியாளர் பதவி அளிப்பதற்கான போட்டி தேர்வு கடந்தாண்டு நவம்பர் 28ம் தேதி நடந்தது.
இதனை 536 யூ.டி.சி.,க்கள் எதிர்கொண்டு எழுதினர். இதன் முடிவுகளும் வெளியிடப்பட்டு, 360 பேர் யூ.டி.சி.,கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக் கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அமைச்சக ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் கூறிய தாவது:
உதவியாளர் பதவிக்கான போட்டி தேர்வில் 360 யூ.டி.சி.,க்களை பணி யாளர் நிர்வாக சீர்திருத்த துறை தேர்வு செய்தது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட யூ.டி.சிக்களின் மதிப்பெண் கொண்ட பட்டியல் வெளியிடப்படவில்லை.
இதனை ஆட்சேபித்து எங்களது சங்கம் சி.பி.ஐ., விசாரணை கோரியது.இதன் எதிரொலியாக பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையானது போட்டி தேர்வில் கலந்து கொண்டவர்கள் மட்டும் அவரவர் எடுத்த மதிப்பெண்களை ஓ.டி.பி., வாயிலாக அவர்கள் மட்டும் பார்க்கும் விதமாக வெளியிட்டது.
இதனால் அனைவரது மதிப்பெண் தெரிய வில்லை. இருப்பினும் வெகு சிலரின் மதிப்பெண் களை மட்டும் வைத்து ஆராய்ந்தபோது பெரும் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது.
எப்படி என்றால், ஒரே ஒரு மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 40 மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.80 மதிப்பெண் எடுத்தவர்கள் பெயிலாக்கப்பட்டுள்ளனர். ஆனால் 38 மதிப்பெண் எடுத்தவர்கள் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட வினோதம் எங்கேயும் அரங்கேறி இருக்காது.
இந்த விவரங்களை வைத்து ஆராயும்போது முறைகேடுகளை மறைப்பதற்காகவே பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை அனைவரது மதிப்பெண்களை கொண்ட தேர்ச்சி பட்டியலை வெளியிட தயங்குகின்றது என்பது உறுதியாகிறது.
இதனால் தான் உதவியாளர் பதவி போட்டி தேர்வுகளில் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
ஆகவே சட்ட விரோதமான இந்த போட்டி தேர்வினை ரத்து செய்து, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

