/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரியமாணிக்கத்தில் சிக்னல் இயங்குமா?
/
கரியமாணிக்கத்தில் சிக்னல் இயங்குமா?
ADDED : பிப் 16, 2025 03:04 AM

கரியமாணிக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் தொகுதி, கரியமாணிக்கம் பகுதியில் இந்தியன் வங்கி, வருவாய்துறை அலுவலகம், வணிக வளாகங்கள் உள்ளதால், சுற்று வட்டார 10 கிராமப் பகுதி மக்களின் அன்றாட தேவைக்கு கரியமாணிக்கம் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் அடிக்கடி டிராபிக் ஜாம் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன், போக்குவரத்து போலீசார் கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வரமால் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது.
இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்கி அவதியடைவது தொடர்கிறது. எனவே, போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.