/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈஷா கிராமோற்சவம் எறிபந்து போட்டி பரிசளிப்பு
/
ஈஷா கிராமோற்சவம் எறிபந்து போட்டி பரிசளிப்பு
ADDED : நவ 26, 2024 06:32 AM

திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் நடந்த ஈஷா கிராமோற்சவம் எறிபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பா.ஜ., பிரமுகர் முத்தழகன் பரிசுகள் வழங்கினார்.
கோயம்புத்துார் ஈஷா யோகா மையம், குமாரப்பாளையம் மகளிர் கூட்டமைப்பு சார்பில் 16ம் ஆண்டு கிராமப்புற மகளிர்களுக்கான 'ஈஷா கிராமோற்சவம்' மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
போட்டிகளில் திருவண்ணாமலை, இடையஞ்சாவடி, குமாரப்பாளையம், புதுக்குப்பம், தேத்தாம் பாக்கம், சுத்துக்கேணி, திருக்கனுார், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 மகளிர் அணிகள் கலந்து கொண்டன.
இதற்கான இறுதி போட்டியில் திருவண்ணாமலை தென்பள்ளிப் பட்டு, குமாரப்பாளையம் ஏஞ்சல்ஸ் அணிகள் மோதியது. இதில், திருவண்ணாமலை அணி முதலிடம் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., பிரமுகர் முத்தழகன் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
ஈஷா யோகா வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சாந்தி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் உள்ளிட்ட ஈஷா தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், குமாரப்பாளையம் வாரியர்ஸ் விளையாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.

