புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்கி 7 நாட்கள் நடக்கிறது
புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு நாளை துவங்கி 7 நாட்கள் நடக்கிறது
ADDED : மார் 17, 2026 04:11 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு நாளை (18ம் தேதி) துவங்கி, 7 நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆறுமுகம் திருமண மண்டபத்தில் ஈஷா யோகா வகுப்பு நாளை (18ம் தேதி) துவங்கி, 7 நாட்கள் நடக்கிறது. இந்த வகுப்பு, காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது.
இந்த வகுப்பில், ஷாம்பவி மஹாமுத்ரா என்ற சக்தி வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா வகுப்பில் கலந்து கொள்வதால், ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு நோய், கழுத்து மற்றும் முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடக்கிறது.
பயிற்சி வகுப்பில், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், விபரங்கள் அறிய, 9443277486, 9443275040 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யவும்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, புதுச்சேரி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
