ADDED : செப் 20, 2025 06:57 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த பெண் பிள்ளைகளை பெற்ற பயனாளிகளுக்கு வைப்பு நிதி தொகைக்கான ஆணையினை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும், முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ், முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பெண் குழந்தையின் பெயரில் சுகன்யா சம்ரிதி (செல்வமகள்) திட்டத்தில், 50 பயனாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வைப்பு நிதியாக ரூ. 50 ஆயிரம் செலுத்தப்பட்டு, அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தினை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இரண்டு பெண் குழந்தைகள் பெற்று குடும்ப கட்டுப்பாடு செய்துள்ள பயனாளிகளுக்கு ரூ. 30 ஆயிரம், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு அதற்கான வங்கி கணக்கு புத்தகம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை நல அதிகாரி ஜெயப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.