/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல்
/
நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல்
ADDED : நவ 15, 2025 06:04 AM

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில், நலத்திட்ட உதவிக்கான ஆணையை, அமைச்சர் லட்சுமிநாராயணன் பய னாளிகளுக்கு வழங்கினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், முதியோர், விதவைகள், நலத்திட்ட உதவி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம், என்.கே.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகர், வைத்திக்குப்பம், வாழைக்குளம், முருகேச கிராமணி தோட்டம், சின்னையாபுரம், குருசுகுப்பம், முனிசிபாலிட்டி குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 157 பயனாளிகளுக்கு ஆணையை, அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் என்.ஆர்., காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

