/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவுரவ ரேஷன் கார்டு பெற விண்ணப்பங்கள் வழங்கல்
/
கவுரவ ரேஷன் கார்டு பெற விண்ணப்பங்கள் வழங்கல்
ADDED : பிப் 03, 2024 07:32 AM

புதுச்சேரி : புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறையின் கவுரவ ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, இலவச பொருட்கள் இல்லாத பச்சை நிற கவுரவ ரேஷன் கார்டுகளாக அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாற்றி வருகின்றனர்.
அதன்படி, உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் கராத்தே சுந்தர்ராஜ், ராமதாஸ் ஆகியோர் நேற்று தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து, கவுரவ ரேஷன் கார்டுகள் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொகுதி எம்.எல்.ஏ., நேரு முன்னிலையில், குடிமை பொருள் வழங்கல் துறை இணை இயக்குனர் தயாளனிடம் வழங்கினர்.
இதில், தாசில்தார் அய்யனார் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள், வசதி படைத்தவர் தங்களாக முன்வந்து ரேஷன் கார்டுகளை, பச்சை நிற கவுரவ ரேஷன் கார்டுகளாக பெற்றுக் கொள்ள வேண்டுமென, நேரு எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்தார்.

