/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கல்
/
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கல்
ADDED : பிப் 19, 2024 11:25 PM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதி பழங்குடியினர் மற்றும் இருளர் இன பயனாளிகளுக்கு சாதி சான்றிதழை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
புதுச்சேரி வருவாய் துறை சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருக்கனுார் பஜார் வீதி அமைச்சர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 67 பழங்குடியினர் மற்றும் இருளர் இன பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், தாசில்தார் நித்தியானந்தம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

