ADDED : ஏப் 09, 2026 05:20 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி மத்திய தொழில் அலுவலகத்தில், அரியாங்குப்பம், மணவெளி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பாட் இயந்தியரம் தேர்தல் துறை மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொழில் மையத்தில், அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளின் ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான அடையாள அட்டை மற்றும் வாக்காளர் விரல்களில் வைப்பதற்கான 'மை' உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.இதேபோல், புதுச்சேரி முழுதும் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேற்று அடையாள அட்டை, பொருட்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
