ADDED : மார் 01, 2024 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் பேக்கர் மஸ்துாராக பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் பேக்கர் மஸ்துாராக பணி புரிந்த 26 ஊழியர்களில், 20 பேருக்கு பைண்டர் அசிஸ்டன்டாகவும், 6 ஊழியர்களுக்கு மெஷின் அசிஸ்டன்டாகவும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 4 பேருக்கு செக் ஷன் ஹோல்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர் பத்மா ஜெய்ஸ்வால், இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

