/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்க படிவம் வழங்கல்
/
ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்க படிவம் வழங்கல்
ADDED : நவ 07, 2025 12:49 AM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்., சார்பில், ஓட்டு திருட்டை கண்டித்து நடந்த கையெழுத்து இயக்க படிவம் மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் நேற்று வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநில காங்., கமிட்டி சார்பில், ஓட்டுத் திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., சார்பில், ராஜிவ் பஞ்சாயத்து அமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் தலைமையில் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அதன் மூலம் பெறப்பட்ட கையெழுத்து படிவம் மாநில தலைவர் வைத்திலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் ஆகியோரிடம் நேற்று வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, முத்தமிழ், சத்யா, அப்துல் லத்தீப், செல்வமணி, பூபாலன், அய்யனார், ஆனந்தன், வெங்கட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

