/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவிக்கான பணி ஆணை வழங்கல்
/
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவிக்கான பணி ஆணை வழங்கல்
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவிக்கான பணி ஆணை வழங்கல்
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவிக்கான பணி ஆணை வழங்கல்
ADDED : ஜூன் 26, 2025 01:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தேர்ச்சிபெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 பேருக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று பணி ஆணை வழங்கினார்.
புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக கடந்த 2024 டிச., 15ம் தேதி நடந்த இளநிலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 38 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு செய்யப் பட்டவர்களில் பல்வேறு காரணங்களுக்காக சிலர் அப்பணியில் சேராததால் 8 பேர் காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர்.
இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து 8 பேருக்கு நேற்று முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளநிலை ஆய்வளர் பதவிக்கான பணி ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். சபாநாயகர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.