/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யு.டி.சி., - எல்.டி.சி., பதவிக்கான பணி ஆணை வழங்கல்
/
யு.டி.சி., - எல்.டி.சி., பதவிக்கான பணி ஆணை வழங்கல்
யு.டி.சி., - எல்.டி.சி., பதவிக்கான பணி ஆணை வழங்கல்
யு.டி.சி., - எல்.டி.சி., பதவிக்கான பணி ஆணை வழங்கல்
ADDED : நவ 08, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு மூலம் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் யு.டி.சி., எல்.டி.சி., பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் மூலம் நேரடி நியமன அறிவிப்பின்படி, விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ், தேர்வு செய்யப்பட்ட 6 யு.டி.சி.,க்கள், 5 எல்.டி.சி.,க்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சட்டசபை வளாகத்தில் நடந்த விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பணி ஆணைகளை வழங்கினார். அரசு கொறடா ஆறுமுகம், சார்புச் செயலர் ஜெய்சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.