தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 14 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கல்

14 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கல்

14 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : ஏப் 18, 2025 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுகாதார துறையில் 14 செவிலியர்களுக்கு பணி ஆைணயை முதல்வர் வழங்கினார்.

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியலர் பணியிடங்களுக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் 152 பேர் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 133 பேர் கடந்த மாதம் வரை பணியில் சேர்ந்துவிட்டனர்.

பல்வேறு காரணங்களால் பணியில் சேராத 14 செவிலியர்களுக்கு பதில் காத்திருப்பு பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த 14 செவிலியர்களுக்கு பணி ஆணைகளை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கினார். அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பணி ஆணை பெற்றவர்கள் வரும் 25ம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us