ADDED : பிப் 17, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அறுவை சிகிச்சை கூட உதவியாளர்கள் பணிக்கு 18 பேருக்கு முதல்வர் ரங்க சாமி ஆணையை வழங்கினார்.
புதுச்சேரி அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி மருத்துவமனை, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த 33 அறுவை சிகிச்சை கூட உதவியாளர் பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், தகுதியுள்ள 18 பேருக்கு முதற்கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி நேற்று 18 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.