ADDED : மார் 03, 2026 04:24 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.
பு துச்சேரி வருவாய் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு நடந்தது. அதில், தேர்வு பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இதில் கா த்திருப்போர் பட்டியலில் இருந்த 4 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 12 பேருக்கு கிராம உதவியாளர் பணிக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன் உடனிருந்தனர்.
