ADDED : ஆக 17, 2026 08:10 PM
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் 2026–27 ம் கல்வியாண்டிற்கான கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கை நேற்று துவங்கியது.
சென்டாக் வெளியிட்டுள்ள பட்டியலில் 1,075 மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ,
காலை பி.காம்., வணிகவியல் பாடத்திற்கும், மதியம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பாடத்திற்கும் சேர்க்கை நடந்தது. அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு சேர்க்கை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மதிவாணன் வரவேற்றார்.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது:
கல்லுாரியில, கூடுதல் வகுப்பறைகள், ஆடிட்டோரியம், விளையாட்டு திறனை மேம்படுத்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷிப்ட் முறையில் இயங்கி வரும் கல்லுாரியை முழு நேரமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான உணவை அரசே வழங்குவதற்கு வெகு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினர்.
இதில், வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
