/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஐ.டி., பார்க் முதல்வர் ஆலோசனை
/
புதுச்சேரியில் ஐ.டி., பார்க் முதல்வர் ஆலோசனை
ADDED : மார் 06, 2024 03:05 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் ஐ.டி., பார்க் துவங்க, சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க, புதுச்சேரியில் ஜி-20 இன்டர்நேஷனல் ரிசர்ச் பார்க் துவங்க உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., நிறுவனத்தை பார்க்க முதல்வர் ரங்கசாமி நேற்று சென்னைக்கு சென்றார். அவருடன், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தொழில்துறை இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
ஐ.ஐ.டி., நிறுவனத்தை முதல்வர் பார்வையிட்டார். அதன் பின்னர். ஐ.ஐ.டி.,இயக்குநர் காமகோட்டி, நிறுவனத்தின் சி.இ.ஓ., சங்கர்ராமன், மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலேசானை நடத்தினார்.
அதில், ஐ.ஐ.டி., நிறுவனத்தில் செய்யப்படும் ஆய்வுகள் குறித்து விளக்கங்கள், புதுச்சேரியில் ஐ.டி., பார்க் துவங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

