/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 25, 2024 04:22 AM

புதுச்சேரி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா, ஓம்சக்தி சேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, எல்லைப்பிள்ளைச் சாவடி 100 அடி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, ஓ.பி.எஸ்., அணியின் செயலாளர் ஓம்சக்தி சேகர் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, ஜெ., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெ., படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் பெரியார் நகர் முனியன் என்பவருக்கு டிபன் கடை நடத்த தனது சொந்த செலவில் தள்ளுவண்டி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி, ஓம்சக்தி சேகர் பேசுகையில், 'நாம் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறோம். விரைவில் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்று படுவோம். புதுச்சேரியில் பன்னீர்செல்வம் ஆசி பெற்ற வேட்பாளர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவார்' என்றார்.
நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ், செல்வராஜ், சதாசிவம், சங்கர், லட்சுமணன், வெரோனிகா, முருகன், அப்பாவு, வெங்கடேசன், சுந்தரமூர்த்தி, குப்புசாமி, தம்பா, சித்தா கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.