பாகூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகத்ரட்சகன் பிரசாரம்
பாகூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகத்ரட்சகன் பிரசாரம்
ADDED : ஏப் 05, 2026 06:39 PM

பாகூர்: 'புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் ஆட்சியில், அவர்களால் மாநில அந்தஸ்தை கூட பெற முடியவில்லை' என ஜெகத்ரட்சகன் பேசினார்.
பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து, பாகூரில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திராவிட மாடல் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி எந்த வளர்ச்சியும் இல்லை. இங்கிருந்து ஒரு தெரு தாண்டினால் தமிழ்நாடு. அங்கு எல்லா நல்ல திட்டங்களும் நடக்கிறது.
மத்திய அரசு எந்த உதவியும் தருவதில்லையே. எப்படி இந்த திட்டத்தை எல்லாம் செயல்படுத்துகிறார்கள் என கேட்கின்றனர்.
தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எல்லாம் புதுச்சேரிக்கும் வர வேண்டும். புதுச்சேரியில் ஒரு புதிய தொழிற்சாலை கூட வரவில்லை. படித்த பட்டதாரிகள் வெளியூரில் வேலை செய்கின்றனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., இரட்டை இன்ஜின் ஆட்சி என்கின்றனர். அவர்களால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைக் கூட பெற முடியவில்லை.
பாகூர் தொகுதிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய, தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாருக்கு மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.
இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேசினார்.
