தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜானதிபதி, ராஜிவ், முதல்வர் விருதுகள் அறிவிப்பு

ஜானதிபதி, ராஜிவ், முதல்வர் விருதுகள் அறிவிப்பு

ஜானதிபதி, ராஜிவ், முதல்வர் விருதுகள் அறிவிப்பு


ADDED : ஆக 14, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 2 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குடியரசு தலைவர் பதக்கம், முதல்வர் பதக்கம், ராஜிவ் காந்தி பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் எஸ்.பி., ரங்கநாதன் ஆகியோருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ரவுடி தடுப்பு பிரிவு ஏட்டு முரளி, திருநள்ளாறு சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் பீட்டர், போக்குவரத்து காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி காவல் பதக்கம்:: பேண்ட் மாஸ்டர், போக்குவரத்து பிரிவு, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம், வயர்லெஸ் பிரிவு, காவலர் சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 20 போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி உத்கிரிஷ்ட சேவா பதக்கம்:: இன்ஸ்பெக்டர் ரகுபதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.

உத்கிரிஷ்ட சேவா பதக்கம்:: முதலியார்பேட்டை, போக்குவரத்து வடகிழக்கு, வில்லியனுார், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 14 பேர் பட்டியலில் உள்ளனர்.

அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் சிறந்த காவல் நிலையம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் இவர்களுக்கு பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us